“சாதனைகளுடன் சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்” என்று பெண்மையைப் போற்றும் இத்தகைய நிகழ்வினை சப்த சக்தி சங்கமமாக எங்கள் ஸ்ரீமதி கங்காதேவி பஜ்ரங்லால்
சொக்கானி விவேகானந்தா வித்யாலயாவில் நவம்பர் 21, 2025 ஆம் ஆண்டு, வெள்ளிக்கிழமை பகல் 10 மணி முதல் மதியம் பன்னிரண்டு முப்பது மணி வரை வெகு சிறப்பாக கொண்டாடினோம். விழாவில் 110 பெற்றோர்களும் 10 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் நோக்கமான பெண்மையை போற்றுதலையும் பாராட்டுவதையும் சமுதாயத்தில் புகுத்துவதற்கான வழிகாட்டலை இந்நிகழ்வினால் நாங்கள் சாதித்தோம்.


